ஜி.டி.என். கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சயின்ஸ் -2025 போட்டி: பரிசளிப்பு விழா
ஜி.டி.என். கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சயின்ஸ் -2025 போட்டி: பரிசளிப்பு விழா

திண்டுக்கல்:
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சயின்ஸ் -2025 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா.
.
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சயின்ஸ் -2025 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி ஜி.டி.என். கல்லூரியில் உள்ள டாக்டர். ஏபிஜே. அப்துல் கலாம் உள்வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியர்கள் காட்சிப்படுத்திய கண்டுபிடிப்புகளை நடுவர்கள் பார்வையிட்டுப் பரிசுக்கான மாணவ, மாணவியர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
இதன் நிறைவு விழாவில் அவைச்சான்றோர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வினைத் துவக்கி வைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அரசுப் பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.ஸி பள்ளி ஆகிய நான்கு பிரிவுகளிலிருந்து சுமார் 400 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபடிப்புகளைக் காட்சிப்படுத்தினர்.
ஒவ்வொரு பிரிவிலும் ஆறு பரிசுகளுக்கு உரிய மாணவ, மாணவியர் கள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ரூபாய் 7000-, இரண்டாம் பரிசாக ரூபாய் 6000-, மூன்றாம் பரிசாக ரூபாய் 5000-, நான்காம் பரிசாக ரூபாய் 4000- ஐந்தாம் பரிசாக ரூபாய் 3000-ஆறாம் பரிசாக ரூபாய் 2000-என ரொக்கத் தொகை பிரித்துப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன்மைக் கல்வி அதிகாரி உஷா பரிசு வழங்கி வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களைப் பாராட்டினார்.
விலங்கியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் ஜீவலதா, வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர் கேப்டன் முனைவர் எம். பாண்டீஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் ம. பொன்னையா நன்றியுரை நவில நாட்டுப்பண்ணுடன் அறிவியல் கண்காட்சி முடிவடைந்தது.
What's Your Reaction?






