தமிழ்நாடு மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டலர்கள் சங்கத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு...

தமிழ்நாடு மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டலர்கள் சங்கத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு...

Jan 6, 2025 - 15:19
 0  59
தமிழ்நாடு மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டலர்கள் சங்கத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு...

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ அம்மன் மஹாலில் தமிழ்நாடு மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டாலர்கள் சங்கத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது இந்த மாநில மாநாட்டில் பத்துக்கு மேற்பட்ட கோரிக்கைகளை மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றினர். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரை விரைவில் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்த இருப்பதாகவும் மாநிலத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள ஸ்ரீ அம்மன் மகாலில்  தமிழ்நாடு மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டாலர்கள் சங்கத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது இந்த மாநில மாநாட்டில் சங்கத்தின் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் மாநாட்டில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த தீர்மானத்தில் தனி நல வாரியம் அமைப்பதற்கு அரசிடம் கோரிக்கை வைப்பது தமிழ் மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டாலர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கால்நடை துறையில் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் கருவூட்டாலர்கள் எந்த சூழ்ச்சியில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் மாநிலம் முழுவதும் உள்ள தொழில் செய்யக்கூடிய அனைத்து உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து சங்கத்தை வலுப்பெற செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்

மேலும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்தித்து பேசிய மாநில தலைவர் சந்திரசேகரன் கூறுகையில்...

நாங்கள் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டல் சங்கத்தின் மேற்பட்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றோம் நாங்கள் கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து வருகின்றோம் மேலும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தங்களை அதிக அளவில் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தி கொள்கிறார்கள் மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கொம்புகளை சீவுவது மாடுகளை பரிசோதிப்பது என பல்வேறு பணிகளில் தங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஆனால் அரசு சார்ந்த எந்த ஒரு திட்டமும் எங்களுக்கு சென்றடையவில்லை எனவே தங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு எடுத்துக் கூறும் விதத்திலேயே இந்த மாநில மாநாடு தற்பொழுது நடைபெற்றுள்ளது விரைவில் தமிழக முதலமைச்சர் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow