தேனி:
தேனி பங்களாமேடு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் நவக்கிரக ஹோமம், தீப ஆராதனை, மஹாபிஷேகம், முதல் கால யாக வேள்வி பூஜை, மங்கல இசை வாஸ்து, யாக மண்டப ஆராதனம், ஸ்ரீ மஹா கணபதி பூஜை, கோ பூஜை போன்ற பூஜைகள் செய்து பக்தர்களுக்கு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் தெளித்தனர்.இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன்,உப தலைவர் கணேஷ்,பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், செயலாளர்கள் ராமர் பாண்டியன், புலேந்திரன், இணைச் செயலாளர்கள் தாளமுத்து, பழனிவேல் முருகன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் பராமரிப்புக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.