மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 14 -வது ஆண்டு விழா...

மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 14 -வது ஆண்டு விழா...

Jan 27, 2025 - 15:53
Jan 27, 2025 - 15:59
 0  4
மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 14 -வது ஆண்டு விழா...

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாங்கரைப்பிரிவு எம். அம்மாபட்டியில் உள்ள மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 14-வது ஆண்டு விழா.

திண்டுக்கல் மாங்கரைப்பிரிவு எம். அம்மாபட்டியில் உள்ள மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 14 -வது ஆண்டு விழா  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் கொண்டாடப்பட்டது.மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் V.ரமேஷ் தலைமை தாங்கினார். மீனாட்சி மேல்நிலை பள்ளி முதல்வர் G.ராமராஜ், மீனாட்சி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் S.பழனிமுருகன், மீனாட்சி அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் K .ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ஆரோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

முதுகலை கணித ஆசிரியர் சலேத்மேரி வரவேற்புரையாற்றினார். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மீனாட்சி அறக்கட்டளையின் தலைவர் Dr.V.சின்னதுரை, செயலாளர் S.பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள். V.குருசாமி, A.முருகேசன், J. அற்புதம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு சிறப்பு  விருந்தினராக காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர்   Dr. M.மலர்விழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, மீனாட்சி மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மற்றும் மீனாட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சியின் முடிவில்  KG ஆசிரியர் காயத்ரி நன்றியுரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow