முத்தழகுபட்டியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் 76- ஆம் ஆண்டு குடியரசு தின விழா...

முத்தழகுபட்டியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் 76- ஆம் ஆண்டு குடியரசு தின விழா...

Jan 27, 2025 - 15:44
 0  5
முத்தழகுபட்டியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம்  சார்பில் 76- ஆம் ஆண்டு குடியரசு தின விழா...

திண்டுக்கல்:

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக 76- ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி திண்டுக்கல் முத்தழகுபட்டியில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் எஸ். விஜயகுமார் தலைமை தாங்கினார். திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர்கள் எ.லியோ, கே.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் எம்.திபூர்சியஸ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

தலைமை சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் Dr.N.S.A.ஜெயஆரோக்கியசெல்வன், முன்னாள் வட்டார தலைவர் டாக்டர்.  ஜெ. அமலா தேவி திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை உரிமையாளர் ஜெ. செல்வராணி, ராணுவ அதிகாரி ஆர். ரமேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.அதனை  தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமுதாய பணியிலும், சமூக சேவையிலும் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டும்  விதமாக மாவட்ட  தலைவர் என். தனுஷ்கோடிக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் பல்வேறு சேவைகளை புரிந்த முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி எல். சகாயமேரிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின்  பொருளாளர் எஸ்.சையது சூரஜ்  நன்றி உரை ஆற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow