சுப்ரமண்யா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா..!!
சுப்ரமண்யா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா..!!
திண்டுக்கல்:
பழனியில் சுப்ரமண்யா அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவில் பராம்பரிய உடையுடன் மாணவ மாணவிகள் பங்கேற்று வள்ளி கும்மி ஆட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாளையத்தில் செயல்பட்டு வரும் சுப்ரமணிய அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா 16 ம் ஆண்டு விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பாரம்பரியமிக்க திருவிழா போன்று வளையல் கடைகள் ,பஞ்சுமிட்டாய் கடை அமைக்கபட்டது. மாணவர்களுக்கு கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் வள்ளி கும்மி ஆட்டம், கபடி போட்டி ,இளவட்டம் கல் தூக்கும் போட்டி ,ரேக்ளா போட்டிகள் மாணவர்கள் ஆர்வத்தை காட்டி வந்தனர்.
மாணவர் மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து வேஷ்டி மற்றும் சேலையில் அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






