புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா...
புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா...
திண்டுக்கல்:
திண்டுக்கல் புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி லூர்து மரிய பிரிஜிட் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி அருள்மேரி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாட்டாண்மை Ln. Dr.N.M.B.காஜாமைதீன் சிறப்புரையாற்றி பள்ளி மாணவிகளுக்கு பொங்கல் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியை பெருமக்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இதில் அனைத்து பள்ளி மாணவிகளுக்கும், வருகை புரிந்த பெற்றோர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
What's Your Reaction?






