மதுரை:
மதுரை அழகர் கோவில் அருகே பொய்கைக்கரைப் பட்டியில், காஞ்சி பெரியவர் கோவில் வாஸ்து, பூமி பூஜை நடைபெற்றது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் - நெல்லை பாலு ஏற்பாட்டில் கோவில் கட்டப்பட உள்ளது. பொய்கைக்கரைப் பட்டி -அலங்காநல்லூர் சாலையில் உள்ள அழகர் கோவில் தெப்பக்குளம் எதிரே, அரசுப் பள்ளிக்கு அடுத்துள்ள சிட்டி பால்ஸ் வளாகத்தில் இக்கோவில் அமைய இருக்கிறது.
இதன் தொடக்க விழா காலை 9 மணி முதல் 12.30 மணி வரை, வேத விற்பன்னர்கள், ஆன்மிக பெரியவர்கள், பொதுமக்கள் சூழ கட்டுமான திருப்பணி தொடங்கியது. இதில் சிறப்பு ஹோமங்கள், ஆராதனைகள், மஹன் யாசம் உள்ளிட்ட வைபவங்கள் நடத்தப்பட்டன. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சேது மாதவா, நந்தினி ரியல் எஸ்டேட் அதிபர் எம்.ஆர். பிரபு முன்னிலை வகிக்தார் மதுரை ராமகிருஷ்ண மடம் ஸ்ரீநித்ய தீபநந்தா சுவாமி பங்கேற்று திருப்பணியைத் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து ஆசி வழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் ஸ்படிக மாலை, விபூதி பிரசாதம், பெரிய புகைப்படம், அழகர்கோவில் பிரசாதம் மற்றும் அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.