தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளிகாட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், K.T.மகேஷ் கிருஷ்ணசாமி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, சதயவிழாக்குழுத்தலைவர் து.செல்வம், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டப் பதிவாளர்கள் ப.சுரேஷ்பாபு (நிர்வாகம்), இரா.வெங்கடேசன் (தணிக்கை), ஒரத்தநாடு சார்பதிவாளர் (பொ) சொ.சிவா மற்றும் பலர் உடன் இருந்தனர்.