மதுரை:
டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக மதுரையில் வெற்றியை கொண்டாடிய மதுரை பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள்
டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தேசிய தலைநகர் முழுவதும் 19 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு இடையேதொடங்கியது வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், மைக்ரோ பார்வையாளர்கள் மற்றும் இந்த செயல்முறைக்கு பயிற்சி பெற்ற உதவி ஊழியர்கள் உட்பட 5,000 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்து வரலாறு படைத்துள்ளது இந்த நிலையில் மதுரை காந்தி மியூசியம் அருகே வழக்கறிஞர் பிரிவு மதுரை மாவட்ட தலைவர் அய்யப்பராஜா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர் இந்நிகழ்வில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் முருக கணேசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயமுருகன், தல்லாகுளம் மண்டல் பிரகாஷ் மற்றும் பிஜேபி நிர்வாகி நவீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.