மதுரை:
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளூவர் சிலை பகுதியில் மதுரை மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்
தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுச்செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 80 வயதை எட்டியவுடன் 20% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடன் அமல் படுத்த வேண்டும்.
கம்யூட்டேசன் தொகை பிடிக்கும் காலத்தை 10 ஆண்டாகக் குறைத்திட வேண்டும்
மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரயில் கட்டண சலுகையை ஒன்றிய அரசு உடன் வழங்க வேண்டும்
1980 முதல் 85 வரை பணி நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கியது போன்று உயர் துவக்க ஊதியம் ரூ. 14940ஐ 27.07.1998 முதல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட செயலாளர் சாலமன் வரவேற்புரை நல்கினார் முன்னாள் பொதுச் செயலாளர் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார் மதுரை மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி அவர்கள் நன்றியுரை கூறினார் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.