மதுரை:
ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர்கள்.
மதுரை செல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் ஒன்றிணைந்து மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
25 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் கல்லூரி பேராசிரியர்களுக்கு,தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை செல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு வழங்கும் போராட்டத்தில் மதுரை மண்டலத் தலைவர் மோகன், மதுரை மண்டல துணைச் செயலாளர் சுபஸ்ரீ, மதுரை மண்டல துணைத்தலைவர் பாலமுருகன், மதுரை மண்டல துணைச் செயலாளர் பாபு கண்ணன், மதுரை மண்டல பொருளாளர் சதீஷ் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.