ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை மாநகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!!

ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை மாநகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!!

Jan 27, 2025 - 15:14
Jan 27, 2025 - 15:15
 0  16
ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை மாநகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!!
மதுரை:
மதுரை மாவட்டம் மேற்கு வட்டம் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை மாநகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விலை நிலங்கள் உள்ளது விவசாயத்தை மூலதனமாக நம்பி வாழ்ந்து வருகிறோம் இங்கு ஏழை எளிய மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர்.

சுமார் 3,300 மக்கள் தொகை உள்ள இந்த கிராமத்தில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 360 பயனாளிகள் இதை நம்பியே தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எங்கள் கிராமத்தை மாநகராட்சி உடன் இணைத்து விட்டால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே மாநகராட்சி உடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைப்பதை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow