சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்...
சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்...

திண்டுக்கல்:
சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் அரசன் கண் மருத்துவமனை இணைந்து கொசவபட்டியில் இலவச கண் மருத்துவ முகாம்.
சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் அரசன் கண் மருத்துவமனை இணைந்து திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கொசவபட்டி பஞ்சாயத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் திருப்பதி , கரூர் அரசன் கண் மருத்துவமனை திட்ட மேலாளர் விக்னேஷ்குமார் , மருத்துவர் பாத்திமா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினார்கள். இதில் கொசவபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 62 பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இதில் 11 நபர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்காக கரூர் அழைத்து செல்வதற்கான அனைத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
What's Your Reaction?






