ராணிப்பேட்டை :
21 ஆண்டுகளாக டாஸ்மார்க் நிறுவனத்தில் சுமார் 25 ஆயிரம் பணியாளர்கள் எந்த அடிப்படை பணி விதிமுறைகளை இன்றி தற்காலிக பணி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றார்கள் இவர்களின் நீண்ட கால கோரிக்கைகளான பணி நிரந்தரம் அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் பணி பாதுகாப்பு இஎஸ்ஐ ஓய்வு ஊதியம் முறையான பணி விதிகள் இறந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு அரசு பணி போன்றவை நிறைவேற்றப்படவில்லை
மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதி எண் 153 ன் படி 10 ஆண்டுகள் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி டாஸ்மார்க் நிறுவனத்தில் செயல்படும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வருகின்ற ஜனவரி 26 அன்று சென்னை மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தின் முன்பாக சுய உரிமை மீட்பு தொடர் போராட்டம் நடத்திட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயல் தலைவர் மு.கு பழனி பாரதி தலைமை தாங்கினார் டி.ஜெயக்குமார் மாநிலத் துணைத் தலைவர் டி.லோகநாதன் மாநில இணை பொது செயலாளர் டி.உமாபதி மாநில தலைமை நிலைய செயலாளர் [TNGTEU] சி.முத்துக்குமார் மாநிலத் துணைத் தலைவர் [TNGTEU]புகழேந்தி செயலாளர் அண்ணா தொழிற்சங்கம் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானம்: 26ஆம் தேதி நடைபெற இருக்கின்ற காத்திருப்பு தொடர் போராட்டத்தில் சுமார் 300 பணியாளர்கள் திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.