ராணிப்பேட்டை:
ஆற்காடு நகராட்சியில் பணி புரியும் ஊழியர்கள் விடியற்காலையில் குப்பைகளை ஏற்றிச்செல்லும் வாகனத்தை தயார்படுத்திக் கொள்வதற்காக சார்ஜர் போட்டு விட்டு ஊழியர்கள் இரவு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது திடீரென்று சார்ஜர் போட்டு வைத்திருந்த வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பதட்டத்துடன் பார்த்த வாட்ச்மேன் அருகில் நகராட்சி ஊழியர்கள் தங்கும் விடுதியில் கூச்சலிட்டு அவர்களை அழைத்து வந்து தீ பற்றி எரிந்து கொண்டிருந்த வாகனத்தில் உள்ள தீயை கட்டுப்படுத்தினர்.
இதனால் குப்பை ஏற்றி செல்லும் பேட்டரி வாகனம் எரிந்ததை குறித்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.