மூத்த ஊடகவியலாளர் ஸ்டீபன் மறைவுக்கு மக்கள் சக்தி இயக்கம்  இரங்கல்...

மூத்த ஊடகவியலாளர் ஸ்டீபன் மறைவுக்கு மக்கள் சக்தி இயக்கம்  இரங்கல்...

Mar 17, 2025 - 16:01
Mar 17, 2025 - 16:02
 0  25
மூத்த ஊடகவியலாளர் ஸ்டீபன் மறைவுக்கு மக்கள் சக்தி இயக்கம்  இரங்கல்...

திருச்சி:

மூத்த ஊடகவியலாளர் ஸ்டீபன் மறைவுக்கு மக்கள் சக்தி இயக்கம்  இரங்கல் 

ஜெயா டிவி, சத்தியம் டிவி, நியூஸ் ஜெ போன்றவற்றில் செய்தியாளராக சிறப்பாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் ஸ்டீபன் அவர்கள் உடல் நலக் கோளாறு காரணமாக நேற்று இரவு நம்மை விட்டு மறைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைவரிடமும் இன்முகத்துடன், அன்போடு பழகக் கூடியவர். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். நண்பன் ஸ்டீபன் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிய வேண்டும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

ஆழ்ந்த வருத்தங்களுடன்,

கே.சி.நீலமேகம்,   
மாநில பொருளாளர், 
மக்கள் சக்தி இயக்கம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow