ஶ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கம்...
ஶ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கம்...
தென்காசி:
குற்றாலம் ஶ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கம்.மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலம் ஶ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவினை போற்றும் வகையில் இலக்கிய கருத்தரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் நடைபெற்றது.தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மறைந்த தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகள், அவர்கள் எழுதிய நூல்கள், தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகள் குறித்தும்,திரிகூட ராசப்பக்கவிராயர், முனைவர் சா.வே.சுப்பிரமணியன், எழுத்தாளர் சு.சமுத்திரம் குறித்தும் கருத்தாளர்கள் கருத்துரை வழங்கினர்.இக்கருத்தரங்கிற்கு முன்னர் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ/மாணவிகளுக்கு முதல் பரிசுத்தொகை ரூ.5,000 /-இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3,000/-மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் வழங்கினார்.
இக்கருத்தரங்கில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் சுந்தர், தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் கல்லூரி செயலர் அன்புமணி, கல்லூரி முதல்வர் முனைவர் நாகேஸ்வரி, மரபின்மைந்தன் முத்தையா, பாவாணர் கோட்டம் ஒருங்கிணைப்பாளர் நிலவழகன், தென்காசி உலகத்தமிழ்க்கழகம் இணைத்தலைவர் மு.நா.பா.தமிழ்வாணன், கல்லூரி தமிழ்த்துறை ஆய்வு மையம் இணைப்பேராசிரியர் முனைவர் பார்வதி, மற்றும் தமிழறிஞர்கள்,அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்,தமிழ் அமைப்புகள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவியர்கள்,அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






