சமூக ஆர்வலரைப் பாராட்டிய லட்சியம் படைப்பாளர் களம்!
திருச்சி
திருச்சி ஒயிட்ரோஸ் சமூக சேவை அமைப்பு தலைவர் சங்கர் இருபத்தெட்டு வருடங்கள் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்விற்காக தன்னார்வப் பணியில் ஈடுபட்டு வருகிறார். பின்தங்கியவர்களுக்கு உதவுதல், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முதியோர் நலன் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 28 முறை இரத்ததானம் அளித்துள்ளார்.
இவரது சமூகப்பணியைப் பாராட்டி
லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் சதாசிவம் தலைமையில், ஸ்ரீ செல்வ பந்தம் குழுமம் இயக்குனர் மாரிமுத்து
பொன்னாடை அணிவித்து லட்சியம் படைப்பாளர் களம் விருதை வழங்கினார்.
முனைவர் லாவண்யா, லட்சியம் படைப்பாளர் களம் திருச்சி கௌரவத் தலைவர் கவிஞர் பொன்மலர்,செயல் தலைவர் ஐசக் அருள்ராஜ், தலைவர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், கிரேஸ் முதியோர் இல்ல இயக்குநர் எமிலி ஜெசிந்தா, சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிறுவனர் அய்யாரப்பன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்
உட்பட பலர் பாராட்டினர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0