திமுக வேட்பாளர் இனிக்கோ இருதயராஜ் ஆதரித்து இளைஞர் அணியினர் தீவிர வாக்கு சேகரிப்பு....
திருச்சி
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் இனிக்கோ இருதயராஜ் ஆதரித்து, திமுகவினர் மற்றும் தோழமைச் கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக இளைஞர் அணி சார்பில் எழுச்சிகரமான வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில்,psk கண்ணன், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.
34-வது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் கண்ணன்தலைமையில், அந்த வார்டுக்குட்பட்ட தெருக்களில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரச்சினையை வழங்கினார்கள். இந்த பரப்புரையில் எதற்கு வாக்களிக்க வேண்டும் அதனால் என்ன பயன் அடைவார்கள் ? என்று கூறினார்கள். இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் பல பயன்களை அடையலாம் என்றும் தெரிவித்தனர் கடந்த தேர்தலில் இதே திருச்சி கிழக்கு தொகுதியில் இனிக்கோ இருதயராஜ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.