திருச்சிக்கு மீண்டும் வருகிறார் விஜய், கு.ப.கிருஷ்ணன் அதிரடிப் பேட்டி!

திருச்சி

Apr 7, 2026 - 11:07
Apr 7, 2026 - 11:09
 0  8
திருச்சிக்கு மீண்டும் வருகிறார் விஜய், கு.ப.கிருஷ்ணன் அதிரடிப் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் உள்ள அக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கட்சித் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
 மீண்டும் திருச்சிக்கு விஜய்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீண்டும் திருச்சிக்கு வந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். குறிப்பாக வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி அவர் திருச்சியில் மக்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ பிரச்சாரம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.
சோதனைகளுக்கு எதிர்ப்பு:வீடுகளுக்குள் புகுந்து பணத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். "வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்வது வேறு, ஆனால் தனிநபர் தேவைக்காக வீட்டில் வைத்திருக்கும் பணத்தைச் சம்மன் இன்றி பறிமுதல் செய்யச் சட்டத்தில் இடமுண்டா?" எனக் கேள்வி எழுப்பினார்.
 இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட்ட போது எழாத கேள்விகள், விஜய் போட்டியிடும் போது மட்டும் ஏன் எழுகிறது? எங்களது வேட்பு மனுக்களில் எந்தக் குளறுபடியும் இல்லை என அவர் விளக்கமளித்தார்.
 வெற்றி உறுதி: "வீட்டுக்கு மூன்று முதல் நான்கு பேர் தவெக-வின் விசில் சின்னத்திற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி எங்கள் கட்சியின் அமோக வெற்றியை உறுதி செய்யும்" என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மக்கள் தவெக விற்கு ஆதரித்து இந்த தேர்தலில்  வெற்றி என்ற பரிசினை அளிப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0