திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது பரபரப்பு: கார் மோதி காவலர் காயம்!

திருச்சி

Apr 2, 2026 - 21:26
Apr 3, 2026 - 09:29
 0  54
திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது பரபரப்பு: கார் மோதி காவலர் காயம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

எதிர்பாராத விபத்து

பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, திருச்சி விமான நிலையம் நோக்கித் தனது காரில் விஜய் அவர்கள் சென்று கொண்டிருந்தார். அப்போது விமான நிலையச் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல்படை காவலர் சதீஷ்குமார்என்பவர் மீது எதிர்பாராத விதமாகத் ஆதவ் அர்ஜ்னா கார் மோதியது.

தொண்டர்களின் துரித நடவடிக்கை

விபத்து நடந்தவுடன் அங்கிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டனர். காயமடைந்த காவலர் சதீஷ்குமாரை மீட்ட தொண்டர்கள், அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனை அறிக்கை

மருத்துவமனையில் காவலர் சதீஷ்குமார் முதற்கட்டப் பரிசோதனையில், விபத்தின் காரணமாக அவருக்குக் காலில் எலும்பு முறிவு (Fracture)ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பான சூழல்

தேர்தல் பிரச்சாரத்திற்காகத் திருச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையில், இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் இதனால் 

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தை பற்றிஅறிந்து காவல்துறை விசாரனை நடத்தினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0