பழுதடைந்த மின்கம்பம் உடனடியாக மாற்றம் - மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாரட்டு...

திருச்சி

Mar 23, 2026 - 14:48
Mar 23, 2026 - 15:11
 0  52
பழுதடைந்த மின்கம்பம் உடனடியாக மாற்றம் - மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாரட்டு...
பழுதடைந்த மின்கம்பம் உடனடியாக மாற்றம் - மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாரட்டு...

திருச்சி மாவட்டம் அல்லித்துறை அருகேயுள்ள சாந்தபுரம் வடக்கு தெருவில், குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகாமையில் இருந்த மின்கம்பம் ஒன்று மிகவும் பழுதடைந்து, சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. எந்த நேரத்திலும் மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அந்தப் பகுதி மக்கள்.
துரித நடவடிக்கை:
இது குறித்து அல்லித்துறை மின்வாரிய அலுவலகத்திற்குப் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரை உடனடியாக பெற்றுக்கொண்டு மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பத்தின் நிலைமையை நேரில் ஆய்வு செய்தனர். ஆபத்தை உணர்ந்த மின்வாரிய ஊழியர்கள், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அவ்விடத்தில் புதிய மின்கம்பத்தை மாற்றி மின் இணைப்பைச் சீரமைத்தனர்.
பொதுமக்கள் பாராட்டு:
மக்களின் பாதுகாப்பைக் கருதி உடனடியாகச் செயல்பட்ட மின்வாரிய பொறியாளர், மின் ஆய்வாளர் மற்றும் களப்பணியில் ஈடுபட்ட அனைத்து மின்வாரிய ஊழியர்களுக்கும் சாந்தபுரம் வடக்கு தெரு பொதுமக்கள் தங்கள்பாரட்டுக்களை  தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்பணியை ஒருங்கிணைக்க உதவிய இளம் தென்றல் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மின்வாரியத் துறைக்கு  பாரட்டுக்களைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நேரும் முன் உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளின் பணி அப்பகுதி   மக்களிடையே பெரும்மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0