"வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்: பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்" மக்கள் சக்தி இயக்கம் சிலம்பம் சுற்றி பொதுமக்களிடம் பிரச்சாரம்!
திருச்சி
திருச்சி பொன்மலையடிவாரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் சிலம்பம் சுற்றி அனைவரும் வாக்களிக்களியுங்கள்.பணம், பொருள் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்று விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டது.
"எனது வாக்கு, எனது உரிமை" , "எனது வாக்கு விற்பனைக்கு இல்லை" போன்ற வாசகம் மற்றும் "வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்", "பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்". என்கிற வாசகம் உள்ள பாதகை ஏந்தி மாணவர்கள் சிலம்பம் சுற்றி 100% வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமையில் நடந்தது. சாமி கலைக்கூடம் சிலம்பம் வைத்தியார் டி.ஜீவானந்தம் சிலம்பம் பயிற்சிக்குவரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் "யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் பணமோ, பொருளோ வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள், அது, ஊழலுக்கு துணைபோகும் செயல் என்பதுடன், ஊழல் பணத்தில் பங்கு பெறும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு சமமான செயல் " என எடுத்துரைத்தார். மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடந்து மக்கள் அதிகம் கூடும் பொது இடமான விளையாட்டு மைதானம், படிப்பக மன்றம், சந்தை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடைபயிற்சி செல்லும் மக்களிடமும் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆர். இளங்கோ, வெ.இரா.சந்திரசேகர், தெப்பகுளம் தாமோதரன், ராமசந்திரன், மோகன், ஆர்.நெடுஞ்செழியன், குமரன், சந்துரு,மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.