திமுக வேட்பாளர் க.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பு...
தஞ்சை மாவட்டம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் சாக்கோட்டை க. அன்பழகன், இரண்டாவது நாளாக இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் கும்பகோணம் மாநகராட்சியின் பகுதிகளான மேலக்காவேரி புதுப்பாலம் பகுதியில் தொடங்கி, மூப்ப கோவில் வழியாக மேல கொட்டையூர் வரை அப்பகுதி மக்களிடம் தீவிர தேர்தல் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது, பெரும் திரளான ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகன பேரணியாக தெருக்களில் சென்று, பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திருச்சியில் கூட்டணி கட்சி மாநகரம் நிர்வாகிகள், திமுக மாமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு, தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகமாக முன்னெடுத்தனர். வழி முழுவதும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0