நெல்லை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் ....

நெல்லை

Apr 3, 2026 - 15:34
Apr 6, 2026 - 16:27
 21
நெல்லை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் ....

.

நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சு.சுப்பிரமணியனை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நெல்லை டவுனில் நடைபெற்றது.

நெல்லை தொகுதி வேட்பாளர் சு.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் திரளாக கட்சியினர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் மத்திய, மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான், மற்றும் திமுக முன்னணியினர், திமுக முக்கிய நிர்வாகிகள், மற்றும் தோழமை கட்சியினர் கலந்துக் கொண்டனர் 

மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் K.S.ரசூல் மைதீன் MC தலைமையில் மாவட்ட செயலாளர் ரியாசூர் ரஹ்மான், தமுமுக மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மாவட்ட துணை செயலாளர் கம்புக்கடை ரசூல், மற்றும் நெல்லை டவுன் பகுதி, மானூர் ஒன்றிய மமக நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்