மதுரை:
கல்வியும்,சுகாதாரமும் இரு கண்களாக கருதி முதலைமைச்சர் வழியில் அமைச்சர்கள் பணியாற்றி வருகிறோம்: பள்ளி விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தத்தனேரி அருள்தாஸ்புரம் வார்டு 22-இல், மாநகராட்சி திரு.வி.க மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஹனிவெல் நிறுவனத்தின் அறிவியல் உபகரணங்கள் தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மண்டலத்தலைவர் சரவண புவனேசுவரி, மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் மகாலெட்சுமி, பள்ளித்தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன், ஹனிவெல் நிறுவனத்தின் அதிகாரி கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கல்வியும், சுகாதாரமும் இரு கண்களாக கருதி முதலைமைச்சர் வழியில் அமைச்சர்கள் பணியாற்றி வருகிறோம் அதிலும் அரசுப்பள்ளிகளுக்கு என எண்ணற்ற திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறோம்.
இதே பள்ளியில் கழிப்பறை, வகுப்பறை கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பறை என எண்ணற்ற திட்டப்பணிகளை கடந்த 8 ஆண்டுகளாக நிறைவேற்றி தந்துள்ளேன். என்னைப்போல் பலரும் இந்த பள்ளியின் வளர்ச்சியில் பங்கு வகித்துள்ளார்கள். சிறப்பான கல்வியை பெரும் வகையில் இது போன்ற உபகரணங்கள் அளித்து பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். ஹனிவெல் நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழ்நாடு அரசு சார்பில் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கல்வியில் மட்டுமல்ல உயர்கல்வியிலும் சாதிக்க வேண்டும் என்றார்.