கோவில் பாப்பாக்குடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்..!!
கோவில் பாப்பாக்குடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்..!!
மதுரை:
மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்.
மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி அருகே சிக்கந்தர் சாவடியில் மதுரை அலங்காநல்லூர் சாலையில் மதுரை மாநகராட்சியுடன் கோவில் பாப்பாகுடி ஊராட்சியை இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 நாள் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் கோவில் பாப்பாகுடி ஊராட்சி பொதுமக்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மேற்கு ஒன்றிய ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாப்பாக்குடி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது. கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என இந்த ஊராட்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்
இந்நிலையில் தற்போது மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்வதாக கூறு மதுரை மாநகராட்சிக்கு அருகில் உள்ள கோவில் பாப்பாக்குடி ஊராட்சி உட்பட 13 ஊராட்சிகள் மற்றும் பரவை பேரூராட்சியும் மதுரை மாநகராட்சி உடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மதுரை மாநகராட்சியுடன் கோவில் பாப்பாகுடி ஊராட்சி இணைவதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டமான 100 நாள் வேலை திட்டம் கூலி தொழிலாளி மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுபவர்கள் மேலும் வீட்டு வரி குடிநீர் வரி கட்டுமான வரி போன்றவை உயரும் சூழல் ஏற்படும் எனவும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் பாப்பாகுடி கிராம மக்கள் மதுரை அலங்காநல்லூர் சாலையில் சிக்கந்தர்சாவடி எனுமிடத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் தங்களது ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை அரசு கைவிடும் வரை போராட்டம் அடுத்த கட்டமாக தொடரும் என தெரிவித்தனர்.
What's Your Reaction?






