அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா...

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா...

Jan 14, 2025 - 13:59
 0  10
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா...
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா...

திருச்சி:

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாள் தைப்பொங்கல் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், உழவர்களின் திருவிழா பொங்கல் திருநாள் என்பது அறுவடை திருவிழாவாக தமிழ்நாட்டில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தை மாதத்தின் முதல் நாளே பொங்கல் நாள் என்பது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். தமிழர்கள் வேளாண்மையை முதன்மை தொழிலாக கொண்டு வியர்வை சிந்த உழைப்பவர்களாவர். நெல், சிறு தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்களை தமிழ் மாதத்தின் ஐப்பசி மாதத்தில் பெய்யும் அடை மழை காலத்தில் விதைப்பது தமிழர்களின் வழக்கம்.அடைமழை காலத்தில் நிரம்பிய குளம், ஏரி, ஆறுகள் ஆகியவற்றின் மூலம் விதைத்த பயிர்களுக்கு போதுமான நீர் கிடைத்து.

நீர் நிலைகளில் தேங்கியிருக்கும் நீரை பயன்படுத்த பாசன கட்டமைப்பை அமைத்து தமிழர்கள் நிர்வகித்து வந்திருக்கின்றனர். வேளாண்மையில் சிறந்து விளங்கிய தமிழர்கள் தங்களது நெல் உள்ளிட்ட பயிர்களை மார்கழி மாதத்தின் கடைசியில் அறுவடை செய்து அந்த அறுவடையில் கிடைத்த நெல்லை அல்லது சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை வேளாண் உழைப்பாளர்களுக்கும் கூலியாக தானியங்களை விவாயிகள் வழங்குவது வழக்கமாக இருந்திருக்கிறது.

அறுவடை திருவிழா தங்கள் நிலத்தில் இருந்து அறுவடை செய்த தானியங்களில் இருந்து புத்தரிசி தயாரித்து அதனை பொங்கலன்று புதிய மண் மற்றும் வெண்கல பானையில் சமைத்து, இயற்கை வழங்கிய மழை, வெயில் போன்ற கொடையால் கிடைத்த தானியத்தை சூரியனுக்கு படைத்து அந்த நாளை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் அறுவடை நாள் விழாவே தமிழர் திருநாள் தைப் பொங்கல் என தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow