ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...

ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...

Jan 21, 2025 - 15:28
 0  14

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையும் இணைந்து கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவச எச்பிவி தடுப்பூசி முகாம்.

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையும் இணைந்து கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவச எச்பிவி தடுப்பூசி வழங்கும்  முகாம்களை செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

ஜனவரி மாதம் முகாமில்  சங்கத் தலைவர் கவிதா செந்தில்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, செப்டம்பர் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 தடுப்பூசிகள் வழங்கி இருக்கிறோம். இதற்கு அதிக விலை உள்ள இந்த தடுப்பூசியை இலவசமாக தொடர்ந்து வழங்கி வரும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனைக்கும், Rtn. மேஜர் டோனர் G. சுந்தரராஜன் ஐயா, ACLS டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் MJF.Ln..C.செண்பகமூர்த்தி, மற்றும் VRS லெதர் நிறுவன உரிமையாளர் PDG AKS. Rtn. ராஜா சீனிவாசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றியும், அதன் தடுப்பூசி பற்றியும் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கிறது.  இன்னும் அதிகளவு விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  ஆயிரம் குழந்தைகளுக்காவது தடுப்பூசி கொடுத்து விட வேண்டும் என்பது எங்களுடைய ஆசையாக இருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்  என்று செயலர் பார்கவி  கூறினார்.

கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு எதிரான குயின் சிட்டியின் செர்விக்யூர் என்ற திட்டத்தின் சேர்மன் டாக்டர். பாலசுந்தரி (மூன்று டோஸ்கள்) 6000 ரூபாய் விலையுள்ள  இந்த ஹெச்பிவை தடுப்பூசியினை குயின்சிட்டி ரோட்டரி மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் இன்னும் அதிக குழந்தைகள் இதில் பயனடைய வேண்டும்.  

இந்த HPV தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் லட்சியமாக இருக்கிறது என்று கூறினார். முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.  7200250467 பொதுமக்கள் இந்த எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு  சங்க உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow