திண்டுக்கல்:
பழனி நகரில் 60 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது- நகர் முழுவதும் காவல்துறையினர் கண்காணிக்க உதவும்- குற்ற சம்பவங்களை தடுக்க பயன்படும் வகையில் ஏற்பாடு- உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கட்டுப்பாட்டு அறையை துவக்கி வைத்தார்.
பழனி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 60 இலட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பழனி நகர் முழுவதும் 290 இடங்களில் தனியாக கம்பங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து கேமராக்களின் பதிவையும் பழனி நகர காவல் நிலையத்தில் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்களை துவக்கி வைத்து கட்டுப்பாட்டு அறையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் பழனி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும், மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் செயல்படுத்த உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிப் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.