பேரையூர் அருகே திருவிழாவிற்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு...

பேரையூர் அருகே திருவிழாவிற்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு...

Mar 24, 2025 - 15:22
 0  4
பேரையூர் அருகே திருவிழாவிற்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு...

மதுரை:

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், உத்தப்புரம் கிராமம், வ.உ.சி.நகரில் உள்ள ஒரு சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் ஸ்ரீமாரியம்மன் பங்குனி மாத வருடாந்திர திருவிழா வருகின்ற 25-03-2025 அன்று காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது அதனையொட்டி திருக்கோவில் பராமரிப்பு வேலைகள் செய்து வருகின்ற 01-04-2025 முதல் 03-04-2025 திருவிழா கொண்டாடுவது என்று மேற்படி கோவில் நிர்வாகக்குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின் நிகழ்வுகள் வருகின்ற 25-03-2025-ம் தேதி அன்று நடந்த முடிவு செய்யப்பட்டு மேற்படி திருவிழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்க காவல்துறைக்கு அறிவுறுத்தும்படி தங்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow