பெரியகுளம் நகர் திமுக சார்பில் இஃப்தார்  நோம்பு விருந்து...

பெரியகுளம் நகர் திமுக சார்பில் இஃப்தார்  நோம்பு விருந்து...

Mar 24, 2025 - 15:02
 0  7
பெரியகுளம் நகர் திமுக சார்பில் இஃப்தார்  நோம்பு விருந்து...
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெரியகுளம் நகர் தி.மு.க., வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் இஃப்தார் விருந்து, (ரமலான் நோன்பு திறப்பு விழா) நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர்,தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இஃப்தார் விருந்தை துவக்கி வைத்தனர்.

பெரியகுளம் நகர் கழக அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக் அப்துல்லா வரவேற்புரையாற்றினார்.பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது  இலியாஸ் விழா ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் பி.டி.செல்லப்பாண்டியன், பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக், அயலக அணி பாசித்ரஹ்மான், நகர சுற்றுச்சூழல் அணி பழனிக்குமார், மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பெரியகுளம் நகர் கழக நிர்வாகிகள், தேனி வடக்கு மாவட்ட சிறுபான்மை நலஉரிமை பிரிவு நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள்,
பொதுநல அமைப்புகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow