மதுரை:
மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோவில் பேரணியாக சென்றனர்.
இதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முறையாக சீருடை அணிய வேண்டும், அதிகமான பயணிகளை ஏற்றக் கூடாது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியை ஒத்தக்கடை காவல் நிலையம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி தலைமை ஏற்று துவக்கி வைத்தார். இந்த பேரணியில் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் கற்பகராஜன், கவியரசு மற்றும் காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.