பூந்தமல்லி போரூர் மெட்ரோ ரயில் சோதனை வெற்றி...

பூந்தமல்லி போரூர் மெட்ரோ ரயில் சோதனை வெற்றி...

Mar 24, 2025 - 16:42
 0  7
பூந்தமல்லி போரூர் மெட்ரோ ரயில் சோதனை வெற்றி...

சென்னை:

பூந்தமல்லி முதல் போரூர் வரை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் வெற்றிகரமான சோதனை முடிந்தது. இதில் உயர் அதிகாரிகள் பயணம் செய்தனர். பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இதில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை 90% பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 10 சதவீதம் பணிகள், ரயில் நிலையம் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளும் முடிவடைந்தால் வரும் டிசம்பர் மாதம் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் (20/3/25) நேற்று முன்திம் இரவு ஆறு மணிக்கு மேல் பூந்தமல்லி மேல்மாநகரில் இருந்து போரூருக்கு ரயில் எடுக்கப்பட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறுகளால் ரயில் சோதனை பாதிக்கப்பட்டது இதனிடையே அன்று இரவு தொழில்நுட்பக் கோளாறு 4 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில் 25 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் நீக்கப்பட்டது இந்த சோதனை ஓட்டம் வெற்றி கரமாக நடைபெற்றது.

 இந்த ரயில் சோதனை ஓட்டத்தில் ரயிலில் தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால் சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் மேலாண்மை இயக்குனர் சித்திக் ,திட்ட இயக்குனர் அர்ச்சுனன் ஆகியோர் பயணம் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow