நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய குடிமைச் சமூக அமைப்புகளின் பங்களிப்பு குறித்த பயிலரங்கம்...
நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய குடிமைச் சமூக அமைப்புகளின் பங்களிப்பு குறித்த பயிலரங்கம்...
மதுரை:
நாட்டை காப்போம் மாநிலக் கன்வீனர் சிஜே இராஜன் தலைமையில் மாநில நிர்வாகிகளுக்கு நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய குடிமைச் சமூகங்களின் பங்களிப்பு செய்வது எப்படி என்பது குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பணிஓய்வு பெற்ற ஆணையர் வே. பழனிக்குமார் IAS தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பு மற்றும் சேவை பணிகள் குறித்தும் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி தொடர்ச்சியாக ஆணையத்தின் பல அடுக்குகளில் கண்காணிப்பு செய்வதும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என பயிற்சி அளித்தார். தொடர்ந்து மாநில நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கு கலந்துரையாடல் பதில் அளித்தார்.
மதிய உணவு இடைவெளிக்கு பின்பு உடனடி வேலை திட்டங்கள் குறித்தும் மூன்று மாத அளவில் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எரோணிமஸ் நிர்வாகிகள் பரிந்துரைகளை தொகுத்து வழங்கி பேசினார். தமிழ்நாட்டின் ஆறு மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்களிப்புடன் மதுரையில் நடந்த மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில் மாநில துணை கன்வீனர் வழக்குரைஞர் சந்தனம் நன்றி உரை ஆற்றினார்.
What's Your Reaction?






