மக்கள் நல பணிகளில் தொடர்ந்து தொண்டாற்றி வருவதை பாராட்டி மாநில அளவில் சிறந்த சமூக சேவகர் விருது மாநில ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு சாலையோரத்தில் ஆதரவின்றி உயிருக்கு போராடும் நபர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மருத்துவம் கிடைக்க செய்வது, இல்லங்களில் சேர்த்து வைப்பது, பேரிடர் காலங்களில் உதவி செய்வது, ரத்ததானம் முகாம் நடத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உயிரை காப்பாற்றுவது, சாலை விபத்துகளில் போராடும் நபர்களின் உயிரைக் காக்க முதல் உதவி அளிப்பது போன்ற பல்வேறு மக்கள் நல பணிகளில் தொடர்ந்து தொண்டாற்றி வருவதை பாராட்டி மாநில அளவில் சிறந்த சமூக சேவகர் விருது மாநில ஆளுநர் வழங்கினார்.