பழனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சி ஒன்றியங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள மின்கல வண்டிகள் வழங்கப்பட்டன. பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களிடம் மின்கல வண்டிகளின் சாவிகளை வழங்கினர்.
கிராமங்களில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தூய்மை பணியாளர்கள் எளிதில் பணியாற்றும் வகையில் 67 லட்சம் மதிப்பீட்டில் 27 மின்கலவண்டிகள் வாங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் வண்டியை முறையாக பராமரித்து பணியை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அறிவுறுத்தினார்.