தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்பக்கரை அருவியில் உலக வன நாளினை முன்னிட்டு மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா உத்தரவின் பெயரில் தேவதானப்பட்டி வன அலுவலர் அன்பழகன் தலைமையிலும், வனவர் ஞானம் முன்னிலையிலும் கும்பக்கரை பகுதிகளில் வனத்தை பாதுகாக்கும் வகையில் ஆங்காங்கே இருக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளை நாட்டுநலப்பணிதிட்ட கல்லூரி மாணவிகள் அவற்றை அகற்றி வனத்தை பாதுகாக்கும் வண்ணமாக சுத்தம் செய்தனர். பின்பு கும்பக்கரை அருவிக்கு வருகைதந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் உலக வன நாளை முன்னிட்டு வனத்தை எப்படி பாதுகாக்க வேண்டுமென்றும் நாம் கொண்டுவரும் பொருட்களை கண்ட இடங்களில் போடக்கூடாது வனப்பகுதிகளில் பிளாஸ்டிக்குகள் மற்றும் குப்பைகள் போடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் நமது வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது போல் வனத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் எடுத்துக் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியின்போது நேரு யுவகேந்திரா, மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன், திரவியம் கல்லூரி நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் முத்துலட்சுமி, நாட்டுநலப்பணிதிட்ட துணை அலுவலர்கள் அழகன், திருமுருகன், கல்லூரி மாணவிகள், வன ஊழியர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டனர்.