பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டுப்பட்ட அருள்மிகு மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி மகாசிவராத்திரி திருவிழா வருகின்ற பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோவில் வளாகத்தில் கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
பரம்பரை நிர்வாக அறங்காவலர் தனராஜ் பாண்டியன், பரம்பரை அறங்காவலர் கனகராஜ் பாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் வேலுச்சாமி, இளநிலை உதவியாளர் தனலட்சுமி, பெருமாள் ,பிரபு மற்றும் பொதுமக்கள், பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.