தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் - மதுரை ரோட்டில் 221 வது கிளையான புதிய 5K கார் கேர் ( மகிழுந்து பராமரிப்பு) திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய நிறுவனத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், தேனி (வ) மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் (வ) ஒன்றிய செயலாளர் எல்.எம் பாண்டியன், 5 கே கார் கேர் நிறுவனர் கார்த்திக்குமார், நீதிபதி தர்மபிரபு,மேன் கார் நிறுவனரும், 5 கே கார் கேர் பெரியகுளம் கிளை உரிமையாளருமான முகமது சர்புதீன், பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ், விசிக தேனி (கி) மாவட்ட செயலாளர் ரபீக், தாமரைக்குளம் பேருராட்சி தலைவர் பால்பாண்டி, பெரியகுளம் நகர் வளர்ச்சி நிர்வாகிகள் மணிகார்த்திக், அன்புக்கரசன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ராஜபாண்டி,செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுஅணி துணை அமைப்பாளர் கார்த்திக், நகர் கழக துணைச்செயலாளர் சேதுராமன், 12 வது வார்டு செயலாளர் முகமது அலி, பரக்கத்துல்லாஹ் உள்பட திமுக நிர்வாகிகள், 5கே கார் நிறுவனப் பணியாளர்கள்,வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.