திருச்சி வயலூர் முருகன் கோவில் மாபெரும் பங்குனி உத்திர திருவிழா!

திருச்சி

Apr 1, 2026 - 10:17
Apr 1, 2026 - 16:46
 0  20
திருச்சி வயலூர் முருகன் கோவில் மாபெரும் பங்குனி உத்திர திருவிழா!
திருச்சி வயலூர் முருகன் கோவில் மாபெரும் பங்குனி உத்திர திருவிழா!
திருச்சி வயலூர் முருகன் கோவில் மாபெரும் பங்குனி உத்திர திருவிழா!

    பங்குனி உத்திரத் திருவிழா என்றாலே திருச்சியில் முதலில் நினைவுக்கு வருவது வயலூர் முருகன் திருக்கோயில் தான்.  காலை முதலே வயலூர் சாலை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மற்ற இடங்களை விட வயலூருக்கு மக்கள் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் .
கல்வி மற்றும் வாக்கு வன்மை: முருகப்பெருமான், அருணகிரிநாதரின் நாவில் "முத்தைத்தரு" என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாட வைத்த தலம் இது. எனவே, தங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், பேச்சாற்றல் பெறவும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் இங்கு திரளாக வருகிறார்கள்.

    பங்குனி உத்திரத்தன்று இங்கு நடைபெறும் பிரம்மாண்டமான தேரோட்டத்தைக் காணவும், அதில் வடம் பிடித்து இழுக்கவும் லட்சக்கணக்கான மக்கள் குவிகிறார்கள். இது இப்பகுதியின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வாகக் கருதப்படுகிறது.  திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள், பல தலைமுறைகளாகத் தங்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு இணையாக வயலூர் முருகனை எண்ணி, காவடி எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

   அதிகாலை 4 மணி முதலே நடை திறக்கப்பட்டு, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து முருகனுக்குத் தங்கள் பக்தியைச் செலுத்தினர்.
"வயலூரானை வணங்கினால் வாழ்வு சிறக்கும்" என்ற நம்பிக்கையோடு, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால்குடம் ஏந்தி வந்தனர்   .

இந்த ஆண்டு மக்கள் வருகை கடந்த ஆண்டுகளை விட அதிகமாக இருந்ததால், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்குத் தேவையான நீர் மற்றும் உணவு வசதிகளைத் திருச்சி பகுதி தன்னார்வலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். இந்த வயலூர் கோயில் சாலை ஓரத்தில் அன்னதானமும் தண்ணீர் பந்தல் மோர் பந்தல் போன்றவை தனமாக கொடுக்கப்பட்டனர். போக்குவரத்து கழகம் வயலூர் பங்குனி உத்திரம் திருவிழா காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வழக்கம்போல இயங்கும் பேருந்துகள் சோம்பரசம்பேட்டை வயலூர் வழியில் மட்டுமில்லாமல்  அல்லித்துறை அதவாத்தூர் வயலூர்  வழியாக பேருந்துகள் மற்றும் சிறப்புகள் பேருந்துகள் இயக்கப்பட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0