கூர்மையான ஆயுதம் வைத்து இன்ஸ்டாவில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் கைது...
கூர்மையான ஆயுதம் வைத்து இன்ஸ்டாவில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் கைது...

திண்டுக்கல்:
கூர்மையான ஆயுதம் வைத்து இன்ஸ்டாவில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நெய்க்காரப்பட்டி பேரூராட்சி. இங்கு உள்ள பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் ராஜீவ் காந்தி. (33) இவர் பாஜக இளைஞர் அணி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்தபடியே கூர்மையான கத்தியை வைத்து பின்னணி பாடல் இசையுடன் வீடியோ எடுத்து தனது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக இளைஞரணியின் ஒன்றிய செயலாளரான ராஜிவ்காந்தி, பழனியில் கடந்த 3 ம் தேதி பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது தனியாளாக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார். இவர் மீது குடிபோதையில் பேருந்தை மரித்ததாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது கூர்மையான ஆயுதம் வைத்து சமூக வைலைதளங்களில் பதிவு செய்துள்ளதால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






