சின்னாளபட்டி பேரூர் கழக திமுகவிற்கு பொறுப்பாளர்-பொறுப்புக்குழு உறுப்பினர் நியமனம்... ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்...
சின்னாளபட்டி பேரூர் கழக திமுகவிற்கு பொறுப்பாளர்-பொறுப்புக்குழு உறுப்பினர் நியமனம்... ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்...

திண்டுக்கல்:
சின்னாளபட்டி பேரூர் கழக திமுகவிற்கு பொறுப்பாளர்-பொறுப்புக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளபட்டி பேரூர் கழக திமுகவிற்கு பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினராக திமுக தலைமை கழகத்தில் இருந்து நியமனம் செய்யப்பட்டவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். திமுக கட்சிப் பணியில் கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூர் கழக திமுக செயலாளராக இருந்த மோகன்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கட்சி கட்டுப்பாட்டுக்கு மாறாக செயல்பட்டு வந்ததினால் சின்னாளபட்டி பேரூர் கழக திமுக நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பை தலைமைக் கழகம் மூலம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்ததோடு முன்னாள் நகர செயலாளர் தி.பாலகிருஷ்ணன் தலைமையில் 10 பொறுப்புக்குழு உறுப்பினர்களை நியமித்தும் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன் தலைமையில் சின்னாளபட்டி திமுக அவைத்தலைவராகவும், முன்னாள் திமுக செயலாளராகவும் இருந்த தி.பாலகிருஷ்ணன் பொறுப்பாளராகவும், அவருடன் இணைந்து பணியாற்ற பொறுப்புக்குழு உறுப்பினர்களாக சு.நாகக்கண்ணன், மு.கீர்த்தனா,சி.சோலைராஜ், செ.கோபிநாத், அ.வேல்முருகன், ரா.குணசேகரன், கா.முத்துவேல், ஆ.கிருஷ்ணன், சு.பொம்மையா, த.தம்பிதுரை உட்பட 10 பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
தங்களை பொறுப்பாளர்களாக நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி முறையாக செயல்படாமல் இருந்ததால்தான் பொறுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு கட்சி கட்டுப்பாட்டை மீறாமல் இருக்க வேண்டும். சிறப்பாக கட்சிப் பணியில் ஈடுபடும் நபருக்கு உரிய பொறுப்புகள் விரைவில் தேடி வரும் என்றார். நிகழ்ச்சியின்போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கு. சத்தியமூர்த்தி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?






