மாநில அளவிலான யோகாசனப் போட்டி: 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு...
மாநில அளவிலான யோகாசனப் போட்டி: 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு...

திருச்சி:
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் 600க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
திருச்சி ஶ்ரீ நற்பவி யோகாலயா உரிமையாளர் மற்றும் ஆதவன் கலை & அறிவியல் கல்லூரி யோகாத்துறை தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி, திருச்சி வயலூர் மெயின்ரோடு சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள ஜோதி மஹாலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
ஶ்ரீ நற்பவி யோகாலயா உரிமையாளர் பரமேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா எஸ்டேட்ஸ் & ஜோதி மஹால் உரிமையாளர் ஜோதி மகாலிங்கம் கலந்துகொண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டியினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். யோகாசனப் போட்டிக்கு 600க்கும் மேற்பட்ட பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெரியவர்கள் அவரவர் வயதுக்கேற்றப் பிரிவில் கலந்துக்கொண்டு சிறந்த முறையில் ஆசனங்களை செய்தனர்.
சிறப்பு விருந்தினரான ஆதவன் கலை & அறிவியல் கல்லூரி முதல்வர் காமராஜ் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரான ஶ்ரீ சக்ரா மற்றும் இயற்கை மருத்துவர் கெளதம் மாநில அளவிலான யோகாசனப் போட்டியில், வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார். ஶ்ரீ நற்பவி யோகாலயா இயக்குனர் சித்ரா நன்றியுரை கூறினார்.
What's Your Reaction?






