வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் இர்ஷாத் இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இதனிடையே பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து பேரணாம்பட்டுக்கு வந்த இர்ஷாத் தனது குடும்பத்தாருடன் பேரணாம்பட்டிலிருந்து சென்னைக்கு சென்றார்.
அப்பொழுது நெல்லுர்பேட்டை அருகே புறவழிச்சாலையில் கார் சென்றபோது குடியாத்தம் புறவழிச்சாலைக்காக பெரும்பாடி பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்த நிலையில் கார் பள்ளத்தின் அருகே சென்ற போது பள்ளம் இருப்பதை கவனித்த இர்ஷாத் உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து நிலைதடுமாறி கார் மெதுவாக பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த இர்ஷாத் மற்றும் அவரது உறவினர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
மேலும் இது குறித்த தகவல் அறிந்த குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் காரை பள்ளத்தில் இருந்து மீட்டனர் மேலும் குடியாத்தம் புறவழிச் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கான உரிய பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் அமைக்கப்படாமல் பணிகள் நடைபெறுவதாகவும் இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எனவே புறவழிச் சாலை பணிகள் மேற்கொள்ளும் முக்கிய சாலைகளின் குறுக்கே உரிய பாதுகாப்பு தடுப்புகள் அமைத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் இதேபோல் கடந்த ஆண்டு குடியாத்தம் சித்தூர் புறவழி சாலையில் பாலத்தின் பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.