காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருமை தியாக சீலர் கக்கன்ஜி அவர்களின் 118வது பிறந்தநாள் விழா...
திருச்சிராப்பள்ளி
பொதுவாழ்வில் இலக்கணமாக விளங்கி தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருமை தியாக சீலர் கக்கன்ஜி அவர்களின் 118வது பிறந்த தினத்தை முன்னிட்டு மணிகண்ட வட்டார தலைவர் கருணாகரன் தலைமையில் அல்லித்துறையில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் முன்னாள் வட்டார தலைவர் மல்லியம்பத்து தனசேகர் சோமரசம்பேட்டை சேட்டு மெடிக்கல் சாந்தகுமார் பாலசுப்பிரமணியன் அல்லித்துறை சந்திரன் செல்வராஜ் சொக்கலிங்கம் பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.