சேலம்:
"காப்பி ரெடி ஆன் வீல்ஸ் துவக்க விழா" எங்கள் பிராண்ட், "காப்பி ரெடி", இந்தியாவில் நம்பர் 1 பிரத்தியேக ஃபில்டர் காபி சங்கிலி தொடராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறோம், மேலும் நாடு முழுவதும் 5000 காப்பி ரெடி விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
"காப்பி ரெடி ஆன் வீல்ஸ்" என்ற எங்கள் கார்ட் மாடலை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். போத்திஸ், தி சென்னை சில்க்ஸ், ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் மற்றும் இந்தியாவில் உள்ள பல முன்னணி பிராண்டுகளுடன் நாங்கள் அதிகாரப்பூர்வ காஃபி பார்ட்னர். எங்களின் முதல் காப்பி ரெடி ஆன் வீல்ஸ் நிலையத்தை தி சென்னை சில்க்ஸ், ஐந்து ரோடு, சேலத்தில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த விற்பனை நிலையத்தை மெடிக்கல் ராஜா (எ) அ. ராஜசேகரன், முன்னாள் தலைவர் சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் அவரால் துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக தி சென்னை சில்க்ஸ், சங்கர், கிளை மேலாளர், காப்பி ரெடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. ராஜேஸ், கலந்து கொண்டனர். காப்பி ரெடி நிர்வாக இயக்குநர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.
காப்பி ரெடியின் நிர்வாக இயக்குநர் அவரது உரையில், "நாம் புதிய நான்கு சக்கர வாகனம்/கார் வாங்கும் போது, அது வருடக்கணக்கில் தேய்மானம் அடைகிறது. ஆனால் ஒரு உரிமையாளர் காப்பியை ரெடி ஆன் வீல் (கார்ட்) விற்பனை நிலையத்தை உரிமம் எடுத்தால், உரிமையாளர் லட்சங்களில் சம்பாதிக்கலாம்" என்றார்.