செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பாக பொங்கல் விழா...

செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பாக பொங்கல் விழா...

Jan 11, 2025 - 12:41
Jan 11, 2025 - 12:47
 0  21
செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பாக பொங்கல் விழா...

கரூர்:

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மூலம் கல்லூரி இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் சார்பாக கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் இராச்சாண்டார் திருமலை ஊராட்சிக்குட்பட்ட கீழப்புதுப்பட்டி கிராமத்தில் பொங்கல் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செப்பர்டு விரிவாக்கத்துறையின் மூத்த ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றறி பேசியதாவது, பொங்கல் விழா தமிழர்கள் வாழ்வியலோடு இரண்டறக் கலந்துள்ளதை பல்வேறு சங்க இலக்கியச் சான்றுகளை மேற்கொடிட்டு பேசினார்.

காவிரிக் கவித்தமிழ் முற்றத்தின் நிறுவனர் மெர்சி டயானா மாணவர்களோடு இணைந்து பொங்கல் தயாரித்துத் தந்ததுடன் வாழ்த்துரையாற்றி  மாணவர்களின் முயற்சியை  பாராட்டி உரையாற்றினார்.

இவ்விழாவில் மாணவப் பிரதிநிதி மோனிஷ் மற்றும் ஜெயசூர்யா உட்பட சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.அதனை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியின் முடிவில் கிராமத்தினர்  அனைவருக்கும் பொங்கல் உணவு வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow