தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்...
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்...

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் : மேயர் என்.பி.ஜெகன்பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாரம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு 50.துக்கும் மேற்ப்பட்ட மனுக்கான குறைகளை முகாம்மூலம் தீர்த்துவைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மேயரின் தனி உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜேஸ்வர், உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
What's Your Reaction?






